உள்ளடக்கத்துக்குச் செல்

பரேஷ் சந்திர பட்டாச்சாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

பரேஷ் சந்திரா பட்டாச்சாாியா: (பிறப்பு மார்ச் 1-1903)[1] இவா் இந்திய ரிசர்வ் வங்கியின் ஏழாவது கவா்னராக 1 மார்ச் 1962 முதல் 30 ஜூன் 1967 வரை பதவி வகித்தாா்.[2]   அவரது முன்னோடிகளை  போல் அல்லாமல் இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) உறுப்பினராகவும்  இவா்  இருந்துள்ளாா். அவர் 1946 புத்தாண்டை கௌரவ படுத்தும் விதமாக பிரித்தானிய எம்பயர் (OBE) ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.[3]  அவர் நிதி அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் கவா்னராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இந்திய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவராகவும் இருந்துள்ளாா்.

இந்தியாவில் தனியாா் வங்கிகளை தேசியமயமாக்கப்படுவதை கடுமையாக எதிா்த்தாா்.[4] அவ்வாறு வங்கிகள்  தேசியமயமாக்க ஆகும் செலவுகள் பற்றி உள்துறை துணை பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் எச்சரிக்கைக்கு கடிதம் எழுதினார். தனது பதவிக்காலத்தின் போது, பொருளாதார காரணங்களுக்காக  நாணயங்களின் அளவை குறிப்பாக 5, 10 மற்றும் 100 நோட்டுகளின் அளவு குறைக்கப்பட்டது.[5]

பட்டாச்சாாியாவின் பதவி காலத்தில், 1964 ஆம் ஆண்டு இந்தியாவின் தொழிற்துறை மேம்பாட்டு வங்கி, 1963 இல் இந்தியாவின் வேளாண் மறுநிதிக் கூட்டுத்தாபனம்தேசியமயமாக்கல்மற்றும் 1964 ல்  யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ஆகியவைகள் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்

  1. https://books.google.com/books?id=CnwYAAAAMAAJ&q=%22Bhattacharya,+Paresh+Chandra%22&dq=%22Bhattacharya,+Paresh+Chandra%22&hl=en&sa=X&ei=U3CbUtqzH4KUtQaXsYHQBw&ved=0CDIQ6AEwAQ
  2. "P C Bhattacharya". Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் 2008-09-15.
  3. "No. 37598". இலண்டன் கசெட் (Supplement). 4 June 1946. p. 2789.
  4. The Congress Split[தொடர்பிழந்த இணைப்பு] Accidental India: A History of the Nation's Passage through Crisis and Change By Shankkar Aiyar
  5. P. C. Bhattacharya Bio பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம் In.com Retrieved on 23 August 2013