ஏ. கலியமூர்த்தி

தமிழக கவல் அதிகாரி, பேச்சாளர்

ஏ. கலியமூர்த்தி (A. Kaliyamurthy) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியாவார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு காவல் துறையில் திருச்சி, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பல்வேறு பொறுப்புகள் மற்றும் பணிகளில் இருந்துள்ளார். கடைசியாக திருச்சியில் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது பணிக்காலத்தில் முதல்வர் விருதையும், சிறப்பான சேவைக்கான குடியரசுத்தலைவர் காவல் பதக்கத்தையும் பெற்றார்.[1] ஓய்வு பெற்ற பிறகு இவர் ஓர் ஊக்கமளிக்கும் தன்னம்பிக்கைப் பேச்சாளராக தனது உரைகளின் மூலம் மக்களை ஊக்குவித்து வருகிறார்.[2]

ஏ. கலியமூர்த்தி
தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை
பிறந்த நாள்: அக்டோபர் 30, 1952 (1952-10-30) (அகவை 71)
பிறந்தயிடம்பூதலூர், தஞ்சாவூர் மாவட்டம்
பணியிலிருந்த ஆண்டுகள்13/10/1976 - 30/10/2010
தரம் காவல்துறை கண்காணிப்பாளர்
விருதுகள்
  • முதலமைச்சர் பதக்கம், சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்

கல்வி

தொகு

கலியமூர்த்தி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் பிறந்து, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டமும், சென்னையில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்று தனது கல்வியை முடித்தார்.[3]

தொழில்

தொகு

1976 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று தமிழ்நாடு காவல்துறை[5] பணியில் சேர்ந்த கலியமூர்த்தி அக்டோபர் 30, 2010 இல் ஓய்வு பெறும் வரை 35 ஆண்டுகள் பணியாற்றினார். தனது பதவிக் காலத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் பதவியை அடைந்தார்.[4] தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாசிக் (1980), லக்னோ (1982), காசுமீர் (1985) ஆகிய இடங்களில் நடைபெற்ற அகில இந்திய காவல் பணிப் போட்டி மற்றும் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஊக்கமளிக்கும் பேச்சாளர்

தொகு

ஓய்வுக்குப் பிறகு, முனைவர் ஏ. கலியமூர்த்தி ஊக்கமளிக்கும் பேச்சாளராக மாறியுள்ளார்.[5] தனது அனுபவங்களை உரைகள் மூலம் பகிர்ந்து மக்களை ஊக்குவிக்கிறார்.[6] and inspiring millions of people through his speeches[7][8].

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சூர்யகலா என்பவரை கலியமூர்த்தி திருமணம் செய்துகொண்டார்.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு