எம். விசயசாரதி
Appearance
எம். விசயசாரதி | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | 7 சூன், 2021 ஆந்திரப்பிரதேசம், சத்தியவேடு |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல் |
எம். விசயசாரதி (M. Vijayasarathy மறைவு: 7 சூன், 2021) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] எம். ஜி. இராமச்சந்திரன் தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 1984 சட்டமற்த் தேர்தலில் மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் அரசியலில் தீவிரமாக செயல்படாமல் இருந்துவந்தார்.
ஆந்திரமாநிலம் சத்தியவேடு அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்துவந்த விசயசாரதி 2021, சூன், 7 அன்று உடல் நலக் குறைவால் தன் 67வது வயதில் இறந்தார்.[2]
வகித்த பதவிகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1980 | அரக்கோணம் | அஇஅதிமுக |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி மறைவு, செய்தி, 2021, சூலை, 8. இந்து தமிழ்