உள்ளடக்கத்துக்குச் செல்

சும்பிட் ஊதுளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்னியோ சபாவில் தயாக்கு இனத்தவர் பயன்படுத்தும் சும்பிட் ஊதுளி

சும்பிட் அல்லது சும்பிட் ஊதுளி (ஆங்கிலம்: Sumpit; Sumpitan; இந்தோனேசியம்: Sumpit (senjata)) என்பது பிலிப்பீன்சு, போர்னியோ மற்றும் சுலாவெசி தீவுகளில் வாழும் பழங்குடி மக்களால்; வேட்டையாடுவதற்கும் போரிடுவதற்கும் பயன்படுத்தப்படும் ஊதுளி கருவியாகும். மூங்கில் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இந்தக் கருவி, பொதுவாக இரும்பிலான கூர் முனைகளைக் கொண்டு இருக்கும்.[1]

ஊதுகுழல் வகையைச் சேர்ந்த இந்த ஊதுளிக் கருவியின் கூர்முனைகள்; பயன்படுத்துவதற்கு முன்னர் நச்சுத் தன்மை வாய்ந்த திரவத்தில் தோய்த்துக் காய வைக்கப்பட்டு இருக்கும்.

பொது

[தொகு]

சும்பிட் ஊதுளிகள் பொதுவாக மூங்கிலில் இருந்து தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சில வேளைகளில், அவை மரத்தில் இருந்தும் செய்யப் படலாம். அவை வழக்கமாக 4 முதல் 6 அடி (1.2 முதல் 1.8 மீ) நீளமும், 2 முதல் 3 செமீ (0.79 முதல் 1.18 அங்குலம்) விட்டமும் கொண்டவை. அவை ஒரு மரத் துண்டு அல்லது இரண்டு, மூன்று மரத் துண்டுகளில் இருந்தும் இணைக்கப் படலாம்.

போருக்குப் பயன்படுத்தப்படும் ஊதுளிகளில் பொதுவாக மரத்தாலான கூர்முனைகள் பயன்படுத்தப் படுகின்றன. கூர்முனைகள் மிகக் குறுகியவை; கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்தக் கூடியவை.[1] எனவே போரில் பயன்படுத்தப்படும்போதும் அல்லது பெரிய விலங்குகளை வேட்டையாடும்போதும், ​​அந்தக் கூர்முனைகள், நச்சுப் பொருள் கலந்த குப்பிக்குள் வைத்து நனைக்கப் படுகின்றன.[2]

நச்சுக் கூர் முனைகள்

[தொகு]

அந்த நச்சுக்கலவை ஆன்டியாரிஸ் டாக்ஸிகேரியா (Antiaris Toxicaria) மரத்தின் செறிவூட்டப்பட்ட சாறில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அந்தச் சாற்றில் ஆன்டிஆரின் (Antiarin) என்ற நச்சு உள்ளது. அது வலிப்பு மற்றும் றப்பை ஏற்படுத்தும். இந்த நச்சு ஊதுளிகளால் கொல்லப்படும் விலங்குகள் உண்பதற்கு பாதுகாப்பானவை.[2]

1912-ஆம் ஆண்டில் பிலிப்பீன்சு நாட்டில் அமெரிக்க ஆய்வாளர்கள், சும்பிட் ஊதுளியின் நச்சு முனை பாய்ந்து செல்லும் உச்சவரம்பு 150 முதல் 180 அடி (46 முதல் 55 மீ) என பதிவு செய்துள்ளனர்.[3]

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Marinas, Amante P. Sr. (17 April 2012). Blowgun Techniques: The Definitive Guide to Modern and Traditional Blowgun Techniques. Tuttle Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781462905546.
  2. 2.0 2.1 Darmadi, Hamid (30 March 2018). "Sumpit (Blowgun) as Traditional Weapons with Dayak High Protection". Journal of Education, Teaching and Learning 3 (1): 113. doi:10.26737/jetl.v3i1.601. 
  3. "Sumpit: The Filipino blowgun". The Manila Times. 24 January 2015. https://www.manilatimes.net/2015/01/24/sports/sumpit-filipino-blowgun/157871/.