உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மிகைல் இலமனோசொவ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகைல் இலமனோசொவ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

மீகயீல் உலோமனசோவ் என்பது தான் சரியான பலுக்கலாகும். மாற்றியருளவும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:57, 16 மார்ச் 2017 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை: உலோமனசோவ் என்பது தவறு. நீங்கள் ஆங்கில மொழிப் பெயர்ப்பு செய்கிறீர்கள். லமனோசொவ் Ломоно́сов என்பது தான் உருசிய மொழியில். இங்கு о́ என்பதைக் கவனியுங்கள். அது ஓ என்றவாறு பலுக்கப்படும். ஏனைய உயிரொலிகளுக்கு மேலே கோடு இல்லை என்பதையும் கவனியுங்கள். தமிழில் இலமனோசொவ் என்பதே மிகப் பொருத்தம். மிகயீல் இலமனோசொவ் என்பது எனது பரிந்துரை. @Drsrisenthil:.--Kanags \உரையாடுக 07:07, 30 மார்ச் 2017 (UTC)
கனக்சு அவர்களின் கூற்றிற்கு உடன்படுகின்றேன். Михаи́л Васи́льевич Ломоно́сов = மிகயீல் வசீல்யெவிச் (இ)லமனோசொவ் .

அழுத்தி உச்சரிப்பதை உருசிய மொழியில் Ударение (உதரேனிய) என்பர்.

இரசிய மொழியில் குறில் நெடில் சுட்டப்படுவது அடையாளக் குறியீட்டின் மூலமே (இரசிய மொழியில் உதரேனிய)
எ.கா: 
Аннá : அன்னா(ஆ)
Áнна : ஆன்ன(ா)
ஆனால் உதரேனிய எனப்படும் { ' } குறியானது எழுத்து வழக்கிலோ அச்சுவழக்கிலோ நடைமுறையில் காணப்படுவது அரிது. 

--சி.செந்தி (உரையாடுக) 04:57, 31 மார்ச் 2017 (UTC)

கலந்துரையாடலுக்கும் பலுக்கல் குறித்து தெளிவுபடுத்தியதற்கும் நன்றிகள்!அன்புடன் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 23:12, 16 ஏப்ரல் 2017 (UTC)



மேலும் காண்க

[தொகு]