உள்ளடக்கத்துக்குச் செல்

மாணிக்கம் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாணிக்கம் தாகூர் (Manicka Tagore) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

இவர் 2014 ஆம் ஆண்டு தேர்தலில், இதே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான இராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி". தினத்தந்தி (மே 24, 2019)
  2. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)