Jump to ratings and reviews
Rate this book

பெண் ஏன் அடிமையானாள்: Pen Yen Adimaiyanaal (Politics Book 1)

Rate this book
ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.

108 pages, Kindle Edition

First published January 1, 1933

Loading interface...
Loading interface...

About the author

Periyar

175 books156 followers
Erode Venkatappa Ramasamy (E.V. Ramasamy), commonly known as Periyar (பெரியார்), also referred to as Thandhai Periyar, was an Indian social activist and politician who started the Self-Respect Movement and Dravidar Kazhagam.

Periyar spent over fifty years giving speeches, propagating the realisation that everyone is an equal citizen and the differences on the basis of caste and creed were man-made to keep the innocent and ignorant as underdogs in the society. Although Periyar's speeches were targeted towards the illiterate and more mundane masses, scores of educated people were also swayed. Periyar viewed reasoning as a special tool. According to him, all were blessed with this tool, but very few used it. Thus Periyar used reasoning with respect to subjects of social interest in his presentations to his audiences. Communal differences in Tamil society were considered by many to be deep-rooted features until Periyar came to the scene.

The bedrock of E.V. Ramasamy’s principles and the movements that he started was rationalism. He thought that an insignificant minority in society was exploiting the majority and trying to keep it in a subordinate position forever. He wanted the exploited to sit up and think about their position, and use their reason to realise that they were being exploited by a handful of people. In a message to the Brahmin community, Periyar stated, "in the name of god, religion, and sastras you have duped us. We were the ruling people. Stop this life of cheating us from this year. Give room for rationalism and humanism". He added that "any opposition not based on rationalism, science, or experience will one day or another, reveal the fraud, selfishness, lies and conspiracies".

Periyar's philosophy of self-respect was based on his image of an ideal world and a universally accepted one. His philosophy preaches that human actions should be based on rational thinking. Further, the outcome of the natural instinct of human beings is to examine every object and every action and even nature with a spirit of inquiry, and to refuse to submit to anything irrational as equivalent to slavery. Thus, the philosophy of self-respect taught that human actions should be guided by reason, right and wrong should follow from rational thinking and conclusions drawn from reason should be respected under all circumstances. Freedom means respect to thoughts and actions considered right by human beings on the basis of reason. There is not much difference between freedom and self-respect.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
689 (55%)
4 stars
381 (30%)
3 stars
125 (10%)
2 stars
26 (2%)
1 star
21 (1%)
Displaying 1 - 30 of 160 reviews
Profile Image for Sumirti Singaravelu.
104 reviews319 followers
December 16, 2015
E.V.Ramasamy aka, popularly known as, Periyar thrashes down every social hindrance and patriarchal norms that oppresses and subjugates women. The language used by the author is neither literary and the style is very much common place (I don't mean it in a derogatory manner), considering the fact that the author has intended the work to reach the wider common populace. And Periyar's ideas are way ahead of his time and much more practical and rational than those of the other leaders of his time, say Gandhi.

Thanks to great men like him, many of the topics discussed here are no longer considered a social taboo (for example, widow remarriage), and some of the societal notions are slowly weaning away (the idea of karpu or Chastity). With the new economic independence that is widely spreading to women and greater access to the technology, which unleashes free access to knowledge, India's women are gaining their empowerment and charting their way to independence.

And my favorite chapters are: karbath thadai (contrast this with the ideas of Gandhi on contraception), Pen viduthailaikku aanmai azhiya vendum (Periyar's definition of aanmai and subsequent thrashing of it is astounding ) and Valluvarum Karpum (Periyar does not even spare our lovely Thiruvalluvar).

A great read, indeed!


Profile Image for Sambhavi.
61 reviews
May 28, 2020
I loved this book for how progressive the content is considering that it's been almost 80 years since this book was written. It's disturbing how some of the topics covered in this book are still in existence. I also liked some of the perspectives that Periyar has with regards to why he believes certain issues are pulling down women. Also this book isn't just about women. It's about gender equality as well. It talks about men as much as it does about women. Would highly recommend everyone to give this one a read.
14 reviews9 followers
January 28, 2015
'பெண் ஏன் அடிமையானாள்' என்பதை 10 அத்தியாயங்களில் விளக்குகிறார் பெரியார். கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் வேண்டும், விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத்தடை மற்றும் பெண்கள் விடுதலைக்கு 'ஆண்மை' அழிய வேண்டும் என்பன அந்த 10 அத்தியாயங்கள்.

பெரியாரிடம் நாம் லேசுபாசாக, சாந்தமாகச் சொல்லும் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அவருடையது எப்பொழுதும் கூர் கத்தி எழுத்து நடை. இந்தப் புத்தகமும் அப்படியே.

"கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்" என்றான் மகாகவி. அதனினும் ஒரு படி மேலே போய் "கற்பென்று" ஒன்றுமில்லை என்கிறார் பெரியார். காதல் குறித்த நமது புனிதங்களை அநாயசமாய் உடைத்துத் தள்ளுகிறார். அதற்கு அவர் காட்டும் உதாரணம் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. ஓர் அரசகுமாரி தோட்டத்தில் ஒருவனைப் பார்த்து காதல் கொள்கிறாள். அதன் பின் அவன் சேவகன் என்று தெரிய வருகிறது. அப்படியானால் அவன் மேல் அவள் கொண்ட காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாக வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகிறார். "எப்படிப்பட்ட காதலும் ஒரு சுயலட்சியத்தை, தனதிஷ்டத்தை - திருப்தியை கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை. ஆசையை விட, அன்பை விட, நட்பைவிட, காதல் என்பதாக வேறொன்றும் இல்லை." என்று சொல்லும் போது நமக்கு ஒரு jerk வந்த போதிலும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அதை மறுக்க முடியாது.

விதவை மறுமண எதிர்ப்பை "சமுதாயத் தற்கொலை" என்று வர்ணித்தவர் இவர் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். விதவைகள் வாழ் சூழல் இயற்கையானது அல்ல, எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதேயாகும் என்கிறார்.

சொத்துரிமை அத்தியாயம் இன்னமும் நமக்குத் தேவையானதாகவே இருக்கிறது. இவ்வளவு வளர்ந்து விட்ட சமுதாயத்திலும், கல்வி கற்ற சூழலிலும் கூட சொத்துரிமை பெண்களுக்கு அவ்வளவு எளிதாக இன்றும் கிடைப்பதில்லை.

கர்ப்பத்தையும் குழந்தைப் பேறு பற்றியும் அவரது கருத்துகள் நிச்சயமாய் ரொம்பவும் மார்டன். 1942-ல் எழுதிய புத்தகம். 72 ஆண்டுகள் ஆன பின்னும் அவர் எதிர்த்த/மாற்ற நினைத்தவைகளில் இன்னும் மாற்றமில்லையோ என்றே தோன்றுகிறது. என்ன, அவர் காலத்தில் பெண் மீதான இந்த அடக்குமுறை வெளிப்படையாக நடந்திருக்கும். இன்று அவைகள் அழகான wrapper-இல் போர்த்தப்பட்டு நடக்கின்றன. இனியாவது இவைகள் மாறட்டும். ஐயாவின் எழுத்துக்கள் அதனைச் செய்யட்டும்.
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews24 followers
January 28, 2021
பெரியாரின் என் முதல் வாசிப்பு.மிக சமீபத்தில் நான் பார்த்த மலையாள திரைப்படமான "The Great Indian Kitchen" பற்றிய நண்பருடன் ஏற்பட்ட ஒரு காரசாரமான உரையாடலின் விளைவே இந்நூல் வாசிப்பின் நோக்கம்.ஓரு சில நூல்கள் காலத்தால் எக்காலத்திற்கும் ஏற்றவையாக இருக்கும். இந்நூலும் அவ்வரிசையில் இடம்பெறுவதற்கு ஏற்ற நூல்.
1940ஆம் காலக்கட்டத்தில் இவ்வளவு முன் நோக்கிய பரந்த பார்வைக் கொண்ட பெண்கள் முன்னேற்றம் பற்றிய 10 அத்தியாயங்கள் கொண்ட கட்டுரைத்தொகுதி.
இன்றளவும் பெண்கள் வாழ்வு (Feminism)பற்றிய ஆண்களின் பார்வையானது (Male Chavanisam) பிற்போக்குத் தன்மையுடன் உள்ளது.
இந்நூல் வாசிப்பில் ஏற்பட்ட தாக்கங்கள் என்மனதின் ஆழத்தில் பெண்கள் பற்றிய பல்வேறு கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.
இந்நூல் வாசிப்பு பெரியாரின் படைப்புகள் மீதான ஆழ்ந்த கண்ணோட்டம் இனிவரும் காலங்களில் உண்டாக்கும்.
இறுதியாக பெரியாரைப் பற்றிக் கூறவேண்டுமானால் அதனால் தான் அவர் பெரியார்.
#Do Read
#Highly Recommended
Profile Image for Kracekumar.
37 reviews31 followers
December 7, 2020
Pen Yen Adimaiyanal is a book with a series of essays published in Kudiarasu on the topic of reasons for women enslavement. The book was published in 1942. Since then the book has numerous publications and translations. The first English translation is under the title Why were women enslaved by Ki. Veera Mani and Meena Kandasamy.

Why women got enslaved is a new translation by Dr. Kovi. Kanga Vinayagam released in 2020. The books satisfy two aims - provide an alternate translation of the existing book with easy to read and provide the tiny book in affordable and in high-quality material.

Translating Periyar is an arduous task because most of his writings are delivered speeches in meetings, protests, and follow a lot of spoken vocabulary. The translation is simple, correct, and easier to read. The deliberate pricing of the book(INR 20) makes it easier to purchase the book in bulk and distribute it to a vast new audience studying in educational institutes.

Periyar's sentences are as long as his stick and life. The author takes extra care to properly connect the long sentence without sacrificing the meaning yet preserving the ease of reading.
Profile Image for Arun  Pandiyan.
173 reviews39 followers
January 12, 2021
என்னுடைய தமிழ் வாசிப்பானது நான் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றபோது, முதல் இரண்டு ஆண்டுகளில் படித்த தமிழ்ப் பாடபுத்தகங்களோடு முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு முதுகலை மற்றும் முனைவர் பட்டம் என தமிழ் வாசிப்பு முற்றுமாக குறைந்து ஆங்கிலத்தில் மட்டுமே புத்தகங்கள் படிப்பது வழக்கமாகிவிட்டது. எனவே, சொற்றொடர் பிழைகளை சலித்துக்கொள்ளவும். வருங்காலங்களில் திருத்திக்கொள்வேன். புத்தக வாசிப்பு இனிதெனினும், தமிழில் வாசிப்பு குறைந்து விட்டதே என சிறிய வருத்தம் எப்போதும் உண்டு. நீண்ட நாட்களாக தமிழ் புத்தகங்கள் படிக்கவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்த வேலையில் என் தந்தை இந்த புத்தகத்தை நேற்று என்னிடம் கொடுத்தார். ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன்.

பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் வெளியிடப்பட்டு ஏறத்தாழ என்பது ஆண்டுகள் ஆனபோதும், இன்றைய பெண்ணியம் பேசுபவர்கள் அனைவரும் முன்வைக்கக்கூடிய முக்கிய தலைப்புகளை 1940 காலங்களிலே பேசி இருக்கிறார் பகுத்தறிவு பகலவன் பெரியார். கற்பு, மறுமணம், காதல், சொத்துரிமை என இவ்வாறாக இந்த புத்தகத்தில் பெரியார் 'பெண் விடுதலை' என்ற தலைப்பின் கீழ் மொத்தமாக பத்து அத்தியாயங்களை எழு���ி இருக்கிறார். பெரியாரின் பெண்ணியம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலுருவ வேறுபாடுகள் பல்வேறு வகையில் இருந்தாலும், ஒரு பாலினத்தவர் மற்றொரு பாலினத்தவருக்கு எந்த ஒரு வகையிலும் சிரிதானோர் இல்லை எனவும், ஆண்கள் எவ்வித வாய்ப்பையும் சுதந்திரத்தையும் தாம் உரிமையாக கருதுகிறார்களோ, அவ்வனைத்து வாய்ப்புகளும் சுதந்திரமும் பெண்களுக்கும் உரிமையாக பொருந்தும் என்பதே ஆகும். இவ்வாறாக, பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் விதமாக ஆண்கள் பற்பல கோட்பாடுகளை அவர் சொந்த சுயநல சவுகரியத்திற்காக உருவாக்கி வைத்துள்ளதாகவும் பெரியார் இந்த பத்து கட்டுரைகளில் விவரித்துரைக்கிறார்.

மேற்கண்ட தலைப்புகளில் சில, இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட மத அடிப்படைவாதிகளுக்கும், பழமைவாத விரும்பிகளுக்கும் விவாதப்பொருளாக இருக்க, பெரியார் இத்தலைப்புகளை தேர்வுசெய்து எளியோருக்கும் புரியும்வண்ணம் எழுதியிருப்பது அவர் பாலின சமநிலை மற்றும் மகளிர் சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடு பெறச் செய்தல் ஆகிய சமூகநீதி கொள்கைகளின் மேல் கொண்டிருந்த பற்றைக்காட்டிலும், ஒரு மனிதன் பிற மனிதன் மேல் செலுத்திகின்ற ஆதிக்கத்தின் மீது கொண்ட வெறுப்பையே பெரிதாக உணர்த்துகிறது. அவ்விதத்தில், ஆதிக்கம்தான் பெரியாரின் all time எதிரி. ஏனெனில், அவர் ஒவ்வொவொரு கட்டுரையின் இறுதியிலும் பெண்களுக்கு கூறுவதாவது முற்போக்கு பேசும் ஆண்மகனார் எவரும் பெண் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக தான் உள்ளார்களே தவிர அவர்களால் ஒரு சிறிதும் பயனில்லை எனவும், பெண்கள் தங்கள் தேவைகளையும், அதிகாரத்தையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கின்ற இயக்க அரசியலையும், போராட்டங்களையும் தாங்களாகவே முன்னெடுப்பதே சிறந்தது என் வாதிடுகிறார்.

அம்பேத்கர் ஒரு கட்டுரையில் ஒரு மனிதனுக்கு உண்மையான முழு சுதந்திரம் எது என்பதை விளக்க, "One who is not a slave of usage, customs, and traditions, or of the teachings because they are brought down from the ancestors; one whose flame of reason is not extinguished--I call him a free man. He who has not surrendered himself, who does not act on the teachings of others blindly; who does not keep faith on anything unless it has been examined critically in the light of the cause and effect theory; who is always prepared to protect his rights; who is not afraid of public criticism; who has enough intellect and self-respect so as not to become a doll in the hands of others--I call such a man a free man. He who does not lead his life under the direction of others, who carves out his own aim of life according to his own reason, and decides himself as to how and in what way the life should be led--I call him a free man. In short, a man who is the master of his own life, him alone I consider a free man." என எழுதி இருப்பார். கருத்து ரீதியில் அம்பேத்கர் மற்றும் பெரியாருக்கு எள்ளளவும் வித்தியாசம் இல்லை என்பது நாம் அறிந்தவையே. அவ்வாறாக, திருக்குறளில் உள்ள பெண் சார்ந்த விடயங்களுக்கு தனது மாற்றுக்கருத்தை முன்வைக்கின்றபொழுது பெரியார் கூறுவதும் அஃதே. எதையும் ஒரு மாமனிதர் சொன்னார் எனவும், அது எக்காலத்திற்கும் ஏற்றது என சொல்லக்கூடிய கருத்துக்களையும், புனிதம் என்று போற்றப்படுகின்ற அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து இக்காலசூழலுக்கு அவை ஏற்றவையா என்று சற்று சிந்தித்து செயல்படுவதும் தான் சமூக மாற்றத்திற்கான கருவியென பெரியார் கூறுகிறார். தவிர, பெண்களுக்கு உண்மை சுதந்திரம் யாதெனில் அது அவர்களின் தேவை மற்றும் விருப்பங்களை தாமாகவே நிர்ணயித்து வாழுகின்ற வாழ்வையே உண்மையான சுதந்திர வாழ்க்கையென கூறுகிறார்.

சமகால தலைவர்கள் பெரும்பாலானோர் பாலின சமநிலை மற்றும் சமூக சீர்திருத்தனை வெற்றுக்கூச்சலாக எண்ணி இவை எல்லாம் சீர்திருத்தங்கள் மூலம் செய்துவிட முடியாது, பிரச்சாரம் மூலம் தான் சரி செய்ய முடியும் மற்றும் ஸ்வராஜ்யம் வந்துவிட்டால் பிறகு சட்டம் இயற்றி கொள்ளலாம் என்றும் மக்களை ஏமாற்றி காலம் தள்ளி கொண்டுவந்தநிலையில், பெரியார் மிகவும் எளிமையாக பெண்களை காப்பா��்ற ஆண்களால் தான் இயலும் என்ற பிம்பத்தை நீக்கி, அதிகாரம் பெற பெண்களை சிறை கொண்டுள்ள ஆண்களால் வகுக்கப்பட்ட கோட்பாடுகளான கற்பு,பெண்மை, ஆண்மை, கலாச்சாரம், பாரம்பரியம், சாஸ்திரம் முதலியன நீங்க பெண்மணிகள் தங்களுக்கு தாங்களே பாடுபட வேண்டும் என்று வலியுறுத்திகிறார். குழந்தை திருமண தடுப்புச்சட்டத்தை ஆங்கிலேயர் கொண்டுவந்த பொழுது, தங்கள் மக்களின் நம்பிக்கை முறைகளில் தலையிட வேண்டாமென அச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசியவாதி ஆண்களை சுட்டிக்காட்டி எழுதியிருப்பது சட்டம் இயற்றுதலில் பெண்களின் பங்கு இக்காலத்தில் எம்மாதிரியான முக்கியத்துவம் வாய்ந்தது என தெளிவுறச்செய்கிறது.

பெரியார் ஒவ்வொறு தலைப்பினை அணுகும் முறையினில் நான் கண்டு வியந்தது என்னவெனில், அவர் அத்தலைப்பின் உட்பட்ட விடயங்களுக்கு பிரமாண்டமான அறிவியல் ஆய்வையோ, மானுடவியல் சார்ந்த ஆய்வறிக்கையோ அல்லது உளவியல் வாதங்களையோ சாராமல், எளிமையாக 'எது நியாயம்?' என்ற ஒற்றை கோட்பாட்டில் கீழ் அணுகும் முறையே. உதாரணமாக கற்பு (Chasitity, Virginity) போன்ற சொல்லாடல்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் உள்ளது? விபச்சாரம் என்ற சொல் ஏன் பெண்களுக்கு மாத்திரம் சொல்ல பயன்பட்டது? விபச்சாரம் செய்ததாக பெண்களை இழி பேசி, பழித்து துன்பப்படுத்தியிருக்கார்களே தவிர, அப்பெண்களை நாடிய ஆண்களை விபச்சாரன் என்று அழைத்தும், அவனை பழித்து பேசியும், குற்றம் சொல்லியும் ஏன் எவரும் முன்வரவில்லை என பெரியாரின் பல கேள்விகள் மனிதர்கள் தர்க்கம் மற்றும் நியாயம் சார்ந்து வாழ சிந்திக்கத்தூட்டுபவையாக உள்ளன. பொது ஒழுக்கம் (Public Morality) என்பது காலத்திற்கு ஏற்றார் போல் மாறக்கூடிய தன்மை உடையது. அது வாழிவியலுக்கு தேவை என்றபொழுதிலும் அம்மாதிரியான பொது ஒழுக்கம் தனி மனித சுதந்திரத்துக்கு பாதகமாக இல்லாமலும், ஏற்ற தாழ்வு பேத தத்துவம் இல்லாமலும் இருக்கவேண்டும். அவ்வாறாக, விதவைகள் மறு திருமணம் என்பது அரை நூற்றாண்டிற்கு முன்பு பொது ஒழுக்கத்திற்கு எதிராக இருந்ததையும், அதற்கான தகவல்களை பெரியார் 'விதவைகள் நிலைமை' என்ற தலைப்பின்கீழ் மேற்கோள்காட்டியவற்றை படிக்கையில், இந்திய துணைக்கண்டத்தில் அக்காலத்தில் பெண் குழந்தைகளின் வாழக்கை நிலை துயரமன்றி வேறெதுவும் இல்லை என புலப்படுகின்றது.

இப்புத்தகத்திலுருந்து நான் கற்றுகொண்டவை பெரியது. அஃதாவது, பெண் விடுதலை என்னவென எவரேனும் கேட்டால் பெரியாரின் இரண்டு வரி பெண்ணியத்திற்கான பொருளை எளிமையாக கூறிவிடுவேன். அது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையமைப்பின் தன்மையிலே வேற்றுமை உண்டெனினும், ஒரு பாலினத்தவர் மற்றொரு பாலினத்தவருக்கு எந்த ஒரு வகையிலும் சிரிதானோர் இல்லை எனவும், ஆண்கள் எவ்வித வாய்ப்பையும் சுதந்திரத்தையும் தாம் உரிமையாக கருதுகிறார்களோ, அவ்வனைத்து வாய்ப்புகளும் சுதந்திரமும் பெண்களுக்கும் உரிமையாக பொருந்தும் என்பதே ஆகும். சமத்துவ உணர்ச்சி கொண்ட அனைவரும் 96 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும்.
Profile Image for Manasvi Karanam.
73 reviews21 followers
September 24, 2020
Spell bound by the progressive ideas Periyar promoted, almost a century ago -- when even to this day, we might be uncomfortable in discussing many of these.

Made me so happy and even a little emotional that a man was such a big champion of women's emancipation. Not just women's emancipation, he championed individuality, rational thinking and freedom like no other (Atleast from what I've read till now).

I would urge every woman to read this book. It's short and written in simple language. Though I agreed with everything that was written in this book (coz, it aligned with my present personal life and thinking), to some women, some of these ideas might come across as impositions.

For example, Periyar argues how having kids curtails women's freedom. May be in today's times some women might not agree with this.To them, my only request would be to remember that this was written for people in India almost a century ago. Also, though the tone might be of instruction at times, to me, it was clear that it came from a place of love and frustration, looking at women's plight a century ago.

Highly, highly recommend.
Profile Image for Vivek KuRa.
241 reviews34 followers
March 21, 2024
இந்த நூல் 1942ம் வருடம் எழுதப்பட்ட நூல் என்பதை இன்றும் என்னால் நம்பவே முடியவில்லை . அந்த கால கட்டத்துக்கு இதில் கூறப்பட்டிருக்கும் அனைத்துக் கருத்துக்களும் மிகவும் தீவிரமான முற்போக்குவாத கருத்துக்கள் (Radically Progressive) ஆகும் .அவை, அப்போதைய சமூக நடைமுறைகளுக்கு நேர் எதிர் முரணானவை. அதனை தைரியமாக உரக்க சொல்ல பெரியாரால் மட்டுமே முடிந்திருக்கிறது..

இந்த நூலை வாசிக்கும் இந்த காலத்து யுவதிகளுக்கு இளைஞர்களுக்கு " இதில் என்ன முற்போக்கு சிந்தனை இருக்கிறது , இப்பொழுது இது நடைமுறையில் இருக்கும் தமிழ் சமூகத்தால் ஏற்��ுக்கொள்ளப்பட்ட பொது சிந்தனைதானே என்று எண்ணக் கூடும் . அவை தமிழ் பொது வழக்கமாக மாறியதற்கு இந்நூலும் அதை எழுதியவரும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
இந்நூலில் கூறப்பட்டுள்ள சில விடயங்கள் இந்த 80 ஆண்டுகளில் சில முற்போக்காக மாறி இருக்கிறது என்றே நினைக்கிறன் . பெண் அடிமைத்தனத்துக்கு சமூகம் மற்றுமின்றி , எப்படி மதமுக்கு , பொருளாதார சுதந்திரமற்ற நிலையும் காரணிகளாக இருக்கிறது என்ற நுட்பத்தை பேசுகிறார் .

இதில் என்னக்கு பிடித்த அத்தியாயங்கள் 1.கற்பு 2.காதல் 3.சொத்துரிமை 4.பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழியவேண்டும் ஆகியவை .

நாம் முழுமையான பெண் விடுதலை என்னும் இலக்கை அடைந்துவிட்டோம் என்று சொல்லிவிட முடியாது . அனால் இந்தியாவின் மற்ற பல மாநிலங்களை காட்டிலும் ஒப்பீட்டளவில் தமிழ் நாட்டில் பெண் விடுதலை மற்றும் உரிமை சார்ந்த முற்போக்கு சமூக மற்றும் சட்ட மாற்றங்களை அதிகம் அடைந்து இருக்கிறோம் என்று சொல்லக் காரணம் பெரியார் மட்டுமே .

பெண்கள் பற்றிய பழைய பிற்போக்கு கொள்கைகாளை புதிய பொட்டலத்தில் மடித்துக் கொண்டுவந்து "இது நம் இந்திய கலாச்சாரம்" என்று இந்த சந்ததியர்களுக்கு நீட்டும் புதிய-பழமைவாதிகள் (Neo-Conservatives) பெருகி வரும் இந்த காலத்தில், அவ்விஷக் கொள்கைகளுக்கு விஷ முறிவாக இந்த நூலை இளைஞர்களும் யுவதிகளும் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது என்று நினைக்கிறன்.

இந்நூல் பழையது தான் , ஆனால் இக்காலத்துக்கு காலாவதியானதாக இல்லாமல் இன்னும் உலக பெண் விடுதலைக்கு தேவையான ஒன்றாகவே இருக்கிறது.

இந்நூலோடு ஏங்கல்ஸ் எழுதிய "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் ( The Origin of the Family, Private Property and the State - by Engels யும் பரிசீலிக்கிறேன் .
11 reviews8 followers
May 19, 2018
A must read book which stands the test of time

Periyar's works are always a class apart. It just boggles me how can a person have such a thought process during the British era. Though I don't agree with all his ideas in this book, especially regarding reproduction, ideas are very well put and most of his ideas make sense even to this date.
Profile Image for Madhupria.
191 reviews22 followers
April 8, 2022
Breaking apart several social constructs of women's oppression using facts and logic is just brilliant! One such example is the chapter on chastity, where Periyar breaks down the word 'kaṟppu' (chastity in Tamil) into its etymological root and then makes a point that it's only used to define a woman's virtue and not that of a man's. The idea of stressing natural, independent chastity rather than forced chastity was refreshing. Even though I had differences of opinion on certain topics in very minor ways, I consider Periyar my hero and so I can't help but rate this book 5 stars. On a side note, the translation should have been written so it's easier to read and without grammatical errors.
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews20 followers
February 1, 2022
G.O.A.T. தமிழர் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டிய புத்தகம்.
Profile Image for Nithyakarpagam.
17 reviews7 followers
January 12, 2021
நாம் புனிதம் என்று சொல்லி பொத்திவைக்கும் அனைத்தையும் தோல் உரித்துக் காட்டிருக்கிறார் பெரியார்.

கற்பு என்பது புனிதம் எனில் அது ஏன் இருபாலருக்கும் சொல்லப்படவில்லை?

ஒரு பெண் தரையை பார்த்து நடந்தால் அவள் கற்புடையவள் என்று சொல்வது, தூங்குகிற குழந்தையை சோதிப்பதற்க்கு தூங்கும் பொழுது கால் ஆடும் என்று சொல்வது போல வேடிக்கையானது.

காதல் என்பது ஒரு மாயயைத் தவிர வேறொன்றுமில்லை என்றும் பெண்களுக்கு சொத்து உரிமை, ஆண்மை என்ற கர்வம் ஒழிந்தால் மட்டுமே பெண் விடுதலை அடைய முடியும் என்றும் அனைத்து தலைப்புகளிலும் பெரியாரின் எழுத்துக்கள் மிரள வைக்கின்றன.

புத்தகம் வெளி வந்து ஏறக்குறைய 80 ஆண்டுகள் ஆனாலும் பெரியாரின் எழுத்துக்கள் இன்னும் நம்மை இக்காலத்தோடு சிந்திக்க வைக்கின்றன.

அனைவரும் படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
Profile Image for Elankumaran.
102 reviews23 followers
December 7, 2022
பெண் ஏன் அடிமையானாள்? ❤️

பெண் ஏன் அடிமையானாள்? என்ற கேள்விக்கு விளக்கம் கானும் முயற்சியிலும் கண்ட உன்மைகளை கரை சேர்க்கவும், பெண்களுக்கான விடுதலைக்கான தேவையையும், தனிமனித சுதந்திரத்திற்கான அவசியத்தையும் ஆராயும் நோக்கில் கற்பு, காதல், கல்யாண விடுதலை, மறுமணம், விபச்சாரம், விதவைகள், சொத்துரிமை மற்றும் கர்ப்பத் தடை போன்ற முக்கிய தலைப்புகளில் தந்தை பெரியார் அவர்கள் 1942 இல் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பே இது.

“மனிதப்பிறவி கொண்ட ஆணும், பெண்ணும் இயற்கைத் தத்துவத்திலும், சமுதாய வாழ்க்கைத் தன்மையிலும் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர்களல்லவென்பதை அறிவுடைய உலகம் மறுத்தற்கியலாது. அங்க அமைப்பிலன்றி, அறிவின் பெருக்கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண்களுக்குள் ஏற்றத்தாழ்வான வித்தியாசம் எதுவும் காண இயலுமா? இயலவே இயலாது.“
Profile Image for Aaradhana.
3 reviews3 followers
October 10, 2020
I was left stupefied by the fact that this book was written back in the '40s, pressing on the issues faced by women a long time ago, which is not relatively different from the present era. However, it should not be denied that things have eased a bit now. " Freedom" was not a very easy call. It was an outcome of years of struggle and rage by many social activists and reformers. This book gave a glimpse of what went behind the liberation of women rights and equality. Periyar's ideologies (truly ahead of its time) will ignite the mind of the readers and social activists for the years to come.
Profile Image for Nishana.
29 reviews16 followers
July 30, 2021
I wish I could hear someone reciting it in tamil
99 reviews1 follower
February 22, 2022
இதை ஒரு கட்டுரை தொகுப்பு என்று சொல்ல வில்லை!! பெண் விடுதலை தொகுப்பு என்று சொல்ல தோன்றும்! இவை அனைத்தும் இன்று சமூகத்தில் உள��ள கட்டுப்பாடுகள்!! பாரதி கவிதை வழியே பெண் விடுதலை பேசினார், ஆனால் பெரியார் ஒரு படி மேலே சென்று அதை நடைமுறை படுத்த தன்னால் இயன்றதை செய்தார்!! சமணிய மனிதன் கொள்ள வேண்டிய விஸ்யதைய இங்கு பேசுகிறார்!! #பெண்விடுதலை
Profile Image for Amarjeet Mehto.
21 reviews17 followers
September 30, 2021
This is a collection of articles written by Periyar E. V. Ramasamy in his Tamil weekly magazine named Kudi Arasu meaning Republic at around 1925-30. He had boldly and logically pointed out the several reasons which were responsible for the enslavement of the women at that time and had provided the solution for each, very rationally and intellectually.
Many of his suggestions now have become the norm for our society today or have taken shape of laws ensuring the freedom of women in our independent India though unfortunately still many are oblivious to that to whom we have a collective responsibility to liberate.

The listed reasons/solutions for women's liberation as discussed in this book are as follows:

1) Chastity
2) Valluvar and Chastity
3) Love
4) The Right to Divorce
5) Remarriage is not wrong
6) Prostitution
7) The Plight of Widows
8) Property Rights
9) Birth Control
10) Masculinity must be Destroyed for Women's Liberation
Profile Image for Someshwari Sengeni.
4 reviews2 followers
July 1, 2021
இத�� முறையாக முன்னுரையுடன் புத்தகமாக வெளியிட்ட காலம் 1942 ஆகும். ஆனால் இது பல்வேறு சமயங்களில் அதாவது 1926 முதல் 1931 வரையிலான காலக்கட்டத்தில் குடியரசு இதழில் வெளிவந்த கட்டுரைகள் ஆகும். கிட்டதட்ட 100 வருடங்கள் ஆக போகின்றன. ஆனால் இன்னமும் இப்புத்தகத்தில் எதிர்த்து பேசப்பட்ட விடயங்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன.


இன்று virginity is a social constrain, virginity is a myth, hymen is a myth என்று இப்பொழுது பரவலாக வெளிநாட்டவ���் பேசி வருவதை காண்கின்றோம், இங்கு பரவலாக இல்லையானாலும் குறிப்பிட்ட சிறு பகுதி மக்களாவது பேசி வருகிறோம். அறிவியல் ரீதியாக இல்லாவிட்டாலும் கற்பு என்ற விடயத்தை அப்பொழுதே சாதரண நடையில் பொது மக்களுக்கு புரியும் வண்ணம் எழுதிவிட்டார். இதுபோன்று மறுமணம் தவறல்ல, கல்யாண விடுதலை, விபச்சாரம், கர்ப்பத்தடை, விதவை, பெண்கள் சொத்துரிமை என இப்பொழுது நம் விவாதிக்கும் பெண் விடுதலைக்கு தேவையான அனைத்து விடயங்களையும் அவற்றின் மூல வேருடன் அலசி ஆராய்ந்துவிட்டார்.


எனினும் இன்னமும் காதல் என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதிய விடயங்களை இன்னமும் நாம் பேச கூட தோடங்கவில்லை என்றே நினைக்கிறேன்.


இப்புத்தகத்தில் கூறப்பட்டுல்ல விடயத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், அவர்கள் இதை யோசித்து ஆராய்ந்து விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும்.
Profile Image for Apurva Vurity.
51 reviews1 follower
June 28, 2019
It is weirdly uncomfortable to think that someone like Periyar fought for the same things decades ago and we continue to fight for the same things. Like any other rationalist thinker, Periyar's take on love, marriage and sexuality will make you twitch if you aren't accustomed to feminism or the concept of equality. His rational writing brings out an objective understanding of how and why women are oppressed. My favourite chapter is that on love and marriage because his explanations are so ridiculously objective and logical that it will bring the hypocrisy of today's marriages out. Read the book if you are comfortable in questioning socialisation. Don't read the book if you are not comfortable with logic.
Profile Image for Arun Radhakrishnan.
68 reviews18 followers
August 23, 2015
ஒழுக்கக் குறைவு என்று பார்த்தால் "பொய்", "விபச்சாரம்" இரண்டுமேதான். ஆனால் தொழில்முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீலையும், வியாபாரிகளையும் மனித சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அத்தொழிலில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டும், பெருமையைக் கொண்டும் அம்மக்களைக் கவுரவமாகவே மதிக்கிறோம். அதுபோலவே நடக்கும் மற்றொரு தொழிற்காரரை இழிவாகக் கருதுகின்றோம்.
பொதுவாக இம்மூன்று பேர்களாலும் மனித சமூகங்களுக்குக் கெடுதியும், நஷ்டமும் இருந்தும் இருவரை ஏற்றுக்கொண்டு, ஒருவரைத் தள்ளுவதானது கேவலமும், சூழ்ச்சியும், சுயனலமுமேயல்லாமல் இதில் நியாயமிருப்பதாகச் சொல்ல முடியுமாவென்று கேட்கிறோம்
Profile Image for Dinesh.
56 reviews1 follower
January 24, 2018
This book was written when divorce was not legal in India. But most of the problems, I think are still relevant. Must read.
16 reviews
April 11, 2020
Periyar is also known as Socrates of south east Asia. In this book he has given a eye opening philosophy about love, marriage, widow remarriage, prostitution, land rights to women.
Profile Image for Sindhu.
43 reviews30 followers
October 21, 2021
Though it’s progressive for its time, it’s not without flaws! And it’s sad that most of the chapters are still relevant in 2021! Oh, his writing style is hard to follow!
Profile Image for Dinesh.
24 reviews
April 12, 2022
நம் நாட்டில் இருக்கும் இரு கொடுமைகளில் ஒன்று, எந்த அடிப்படையும் இன்றி, பிறப்பால் மனிதர்களை தரந்தாழ்த்தி அடிமைப்படுத்துவது. மற்றொன்று பெண்களை ஆண்களுக்கு அடிமையாக நினைத்து கொடுமை படுத்துவது. இதில் பெண் எப்படி அடிமையாக்கப்படுகிறாள், என்பதை ஆராய்வதில்லாமல் , அதற்கு காரணகர்த்தாக்களையும் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் விவாதிக்கிறார்.
ஒவ்வொரு காரணத்தின் பேரிலும், ஒரு தலைப்பைக்கொண்டு விவாதிக்கிறார்.
எனக்கு, இதை படிக்கும் பொழுது அவர் எடுத்துரைக்கும் ஒவ்வொரு காரண கருத்தும் எக்காலத்துக்கும் ஏற்றத்தக்க வகையானது என்று எண்ண வைக்கிறது. ஏனெனில் இக்கொடுமைகள் இக்காலத்திலும் தலை விரித்தாடுகிறது.
நான் இக்காலத்திலும் பேச தயங்கும் ஏகோபித்த கருத்துக்களை, அந்த காலத்தில், அதுவும் பிற்போக்கின் உச்சத்தில், மற்றும் அறியாமையின் மிகுதியில் வாழ்ந்த மனிதர்களுக்கிடையே, இதை பொது வெளியில் மகா பொது ஜனங்களிடையே பேசியது, மிகச் சிறந்த காரியம்.
இந்த புத்தகம் எல்லோரும் படிக்க மற்றும் சொல்லிய கருத்தின் ஆழம் அறிந்து மாற்றத்திற்கு செல்வோமாக.
Profile Image for Prasanna Kumar.
52 reviews8 followers
September 20, 2020
ஈ. வெ. இராமசாமி என்கிற பெரியார் பெண்களுக்கு முன் இருக்கும் அனைத்து தடைகளையும், அடிமைத்தனத்தையும் தன் எழுத்துக்களின் மூலம் உடைத்து எறிகிறார்.

அவர் வாழ்ந்த காலத்தை தாண்டி தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்.

பெண் ஏன் அடிமையனால் என்பதை 10 அத்தியாயங்களில் விளக்குகிறார் பெரியார். அதில் கற்பு, கல்யாண விடுதலை, சொத்துரிமை, விதவை மறுமணம் என பல இன்றும் பெண்களுக்கு எதிராக தான் உள்ளது.

பெரியாரின் எழுத்து எப்போதும் கூர்மையானது அது யாருக்காகவும் வளையாது என்பதை 'வள்ளுவரும் கற்பும்' அத்தியாயத்தில் காணலாம்.

1942 இல் எழுதிய புத்தகம், 78 ஆண்டுகள் கழித்தும் அவர் மாற்ற நினைத்த பல கருத்துக்கள் இன்றும் மாறாமல் பெண்களுக்கு எதிராகவே இருப்பதாகவே தோன்றுகிறது.
Profile Image for Poovizhi M P.
Author 4 books17 followers
January 28, 2022
"If a woman should neel before a man, that man should also neel before her"
" A girl should not only be defined by her grace and softness, like a man, woman should also be characterized as brave, righteous anger, leadership quality."
Periyar's teachings have brought a lot of changes in the people's mindset. It's 2022 and still there are people out there both men and women stuck in their old opinions that women should be not equal to men. Girls are reminded of this every step of the way. Books like this help in rational thinking.
Profile Image for Surendhiran Lakshmanan.
Author 1 book10 followers
February 5, 2021
இந்த புத்தகம் பெண்கள் பற்றி மட்டுமல்ல, ஆண்கள் பற்றி உள்ள ஒரு பெரும் பொய் பிம்பத்தை தோலுரித்துக்காட்டும் என்பது உறுதி... அனைவரும் படித்து தெளிய வேண்டிய, இன்றைக்கும் தேவை இருக்குற கருத்துகளை கொண்ட புத்தகம்... Must Read... Strongly recommended for all genders..
Profile Image for Gayatri Manu.
8 reviews7 followers
September 7, 2023
5 stars for the most exceptional Gandhi diss ("Even the national dictator, caste-frenzied and orthodox comrade Gandhi...") and matter of fact chapter title ("Masculinity" must be destroyed for women's liberation)
4 reviews
October 31, 2022
கிழவனிடம் பல கற்றறிந்தேன்!
❤️🥺
Displaying 1 - 30 of 160 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.